Wednesday, August 15, 2012

ஆகஸ்ட்டு 15

'இரவினில் கிடைத்தது சுதந்திரம் இன்னும் விடியவே இல்லை '

'சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்துகொண்டு ஆற்றுகிறார் பிரதமர் '

ஆகஸ்ட்டு 15 அல்லது ஜனவரி 26 களில் பொதிகை டிவியில் ரோஜா படம் போடுகிறார்களோ இல்லையோ நம்மவர்கள் தவறாமல் மேற்கண்ட உளறல்களை கொட்டுவதுண்டு.
உக்கார்ந்த இடத்திலிருந்தே ரொம்பவும் எளிதாக மற்றவர்களை விமர்சித்துவிட முடிகிறது நம்மால். இது போன்று போகிற போக்கில் விமர்சித்துவிட்டு அதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்வது தன்னையே ஏமாற்றிக் கொள்வதேயன்றி வேறென்ன .
பலவீனமானவர்கள் சிலர், தன்னிடத்தே தான் குறையெனக் கருதும் ஒன்றை மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்னே தன்னைத் தானே கேலி செய்வது போல, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என யாரேனும் லிங்கன் காலத்து வசனத்தை வீசும் முன் சுதாரித்து இது அத்தனையும் வேஸ்டு என்று அதை வைத்தே காமெடி பண்ணுவது எஸ்கேப்பிசம் தானே .

'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி'


என்று இவர்களின் சொன்னான் பாரதி. இவர்களை நகைகளுக்குப் பின் ஏதேனும் சமூக அக்கறை இருக்கிறதா என்றால் ஒன்றுமில்லை. சமூகத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாதவர்கள் . சீரழிந்த ஒரு சமூகத்தில் தானும் ஒரு அங்கம் தானும் ஒரு காரணம் என்று உணராதவர்கள். உங்களில் யார் உத்தமாரோ அவர் மட்டும் கல் எறியுங்கள் என்றார் இயேசு. உங்களில் யார் ஒரு சாலை விதிகளை சரிவர கடைபிடிக்கிறாரோ அவர் மட்டும் வாங்கித்தந்த விடுதலையை விமர்சித்திடுங்கள் என்று மகாத்மாவின் ஆத்மா சொல்லகூடும்


Friday, April 20, 2012

மரம் குறித்த சில கீச்சுகள்


திடீரென நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து விட்டதாலோ என்னவோ அதிரடியாய் தோன்றிய சிந்தனைகளை ட்விட்டரில் கீச்சுகளாய் போட்டிருந்தேன்.. அத்தனையும் மரம் பற்றியவை.. அவைகளின் தொகுப்பு இங்கே உங்களுக்காக...



***********************************************************************

கதையின் முன்னுரை தொடங்கப்பட்ட காகிதத்திலும் கூட எழுத்தப்பட்டிருக்கலாம் ஒரு மரத்தின் முடிவுரை




***********************************************************************

எழுத்தாளனின் ஆயிரம் குரல்கள் ஒலித்த புத்தகத்தில் ஆயிரத்து ஒன்றாவதாக மரத்தின் அழுகுரல் ஒலிக்கிறது




***********************************************************************

மனித வாழ்வின் நிலையாமை குறித்த புத்தகத்தை மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்




***********************************************************************

இன்னும்கூட எழுத்தாளர்கள் காகிதத்தில்
சைன்ஸ்பிஷன்ஸ் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்




***********************************************************************

காகிதங்கள் சொல்லாத கதைகள் ஆயிரம் ஒரு மரத்தின் கனத்த மௌனம் சொல்லும்




***********************************************************************

ஒரு மரத்தை வெட்டும்போது ஓடிவராத மற்ற மரங்களாலேயே அழிந்தது ஒரு வனம்




***********************************************************************

இலையை பறித்த பின் கிளையை சரித்த பின் மரத்தை அழித்த பின்னும் ஏன் வனத்தை அழித்த பின்னும்கூட பொறுமைக்கு உதாரணமாக சொல்லிக்கொண்டிருப்பார்கள் சிலர்




***********************************************************************

பெருந்தோப்புக்குள் இருந்தாலும் அதுவும் தனி மரமே!




***********************************************************************

ஏவாள் கடித்த ஆப்பிளின் மரத்திற்கு விதை போட்டது யார் ???




***********************************************************************

மரம் குறித்து என்னால் எப்போதும் நேர்கோட்டில் சிந்திக்க முடிவதில்லை






ட்விட்டரில் தொடர :
https://twitter.com/mayakannan



Sunday, July 31, 2011

எ.பி.கா.பா.கவிதை!

அத்தனைக்கும் ஆசை ... படு.
திருக்குரலிலும் கிடைக்காத கா.பா.கவிதை !
இது சீத்தா அவர்கள் ட்விட்டரில் எழுதியது..!

Friday, June 17, 2011

மறுபடியும்....

திரும்பவும் ப்ளாக் எழுத துணிந்துவிட்டான் மாயா. 2008 -இல் எதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கிய என் வலை மூன்று வருடங்களில் மூன்று பதிவுகளையே கண்டுள்ளதற்கு என் வேலை பளு ஒன்றும் காரணம் அல்ல. ப்ளாக் எழுதுவதும் டைரி எழுதுவதும் தடைபடுவதற்கு laziness தான் காரணம். வருடத்தின் ஆரம்பத்தில் உற்சாகமாக ஆரம்பித்து பின் முதல் வாரத்தோடு முடிந்து விடுகிறது . இம்முறை தினமும் ஒரு பதிவு முடியாவிட்டாலும் வாரம் ஒன்று வெளியிட முயல்கிறேன்.

Wednesday, March 10, 2010

எனக்குப் பிடித்த பாரதியின் கவிதை....
உங்களுக்கும் பிடிக்கும்...
" தேடிச் சோறு நிதம் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

பாரதியின் வைர வரிகள்.....

Wednesday, April 15, 2009

முதல் கவிதை...

இந்திய வலைத்தள வரலாற்றில் முதல் முறையாக, பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பியும் எதிலும் பதிப்பிடப்படாத எனது முதல் கவிதை
இதோ உங்களுக்காக...

ஏக்கம் !
துங்கிய பின்னும் தொடர்ந்தது
விம்மலும் விக்கலும்...
கூடவே...
அடித்து கை ஓங்கிய
அம்மாவும்
கரடி பொம்மையும் !

இது ஆறேழு வருடங்களுக்கு முன் எனது கல்லூரி காலத்தில் எழுதியது ....
வேடிக்கை என்னவென்றால் ஏக்கம் எனப் பெயிரிடப்பட்ட இக்கவிதை வெளிவராததே பெரும் ஏக்கமாகிவிட்டது...

Tuesday, April 14, 2009

இன்று தமிழ் புத்தாண்டு ...

பொல்லாதவன், கெட்டவன்,போக்கரி,எதிரி, வில்லன் என தமிழ்ப் படங்களின்பெயர்களைப் போலிருந்தாலும் இன்று பிறந்த 'விரோதி' மொக்கையாக இல்லாதிருக்கும் என நம்புவோமாக...!
இன்று புத்தாண்டு என்பதிலேயே பல பேருக்கு Doubt...
நியாந்தாங்க...
உங்கள கேக்காம திடீர்னு வந்து உங்க பேர மாத்தி வச்சிட்டா ஏத்துக்குவிங்களா.. என்ன?
இன்று ஊர்கூடி வயலுக்கு சென்று சனி மூலையில் ஏர் உழுது சாமி கும்பிட்டு , மாலையில் வரிசயாக பொங்கலிட்டு பகிர்ந்துண்ணும் எங்கள் கிராம மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?


எல்லாம் மாயா !