'இரவினில் கிடைத்தது சுதந்திரம் இன்னும் விடியவே இல்லை '
'சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்துகொண்டு ஆற்றுகிறார் பிரதமர் '
ஆகஸ்ட்டு 15 அல்லது ஜனவரி 26 களில் பொதிகை டிவியில் ரோஜா படம் போடுகிறார்களோ இல்லையோ நம்மவர்கள் தவறாமல் மேற்கண்ட உளறல்களை கொட்டுவதுண்டு.
உக்கார்ந்த இடத்திலிருந்தே ரொம்பவும் எளிதாக மற்றவர்களை விமர்சித்துவிட முடிகிறது நம்மால். இது போன்று போகிற போக்கில் விமர்சித்துவிட்டு அதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்வது தன்னையே ஏமாற்றிக் கொள்வதேயன்றி வேறென்ன .
பலவீனமானவர்கள் சிலர், தன்னிடத்தே தான் குறையெனக் கருதும் ஒன்றை மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்னே தன்னைத் தானே கேலி செய்வது போல, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என யாரேனும் லிங்கன் காலத்து வசனத்தை வீசும் முன் சுதாரித்து இது அத்தனையும் வேஸ்டு என்று அதை வைத்தே காமெடி பண்ணுவது எஸ்கேப்பிசம் தானே .
'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி'
என்று இவர்களின் சொன்னான் பாரதி. இவர்களை நகைகளுக்குப் பின் ஏதேனும் சமூக அக்கறை இருக்கிறதா என்றால் ஒன்றுமில்லை. சமூகத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாதவர்கள் . சீரழிந்த ஒரு சமூகத்தில் தானும் ஒரு அங்கம் தானும் ஒரு காரணம் என்று உணராதவர்கள். உங்களில் யார் உத்தமாரோ அவர் மட்டும் கல் எறியுங்கள் என்றார் இயேசு. உங்களில் யார் ஒரு சாலை விதிகளை சரிவர கடைபிடிக்கிறாரோ அவர் மட்டும் வாங்கித்தந்த விடுதலையை விமர்சித்திடுங்கள் என்று மகாத்மாவின் ஆத்மா சொல்லகூடும்

No comments:
Post a Comment